×

மேக்ஸ்வெல் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அசத்தல்

மெல்போர்னில் நேற்று நடந்த பிக் பாஷ் டி20 லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தியது. டாசில் வென்ற ஸ்டார்ஸ் முதலில் பந்துவீச, சிட்னி தண்டர் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன் குவித்தது. கவாஜா 33, ஹேல்ஸ் 26, கேப்டன் பெர்குசன் 35, மேத்யூ கில்கெஸ் 41 ரன் விளாசினர். ஸ்டார்ஸ் பந்துவீச்சில் ஹரிஸ் ராவுப் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். ஸம்பா, கோல்டர் நைல் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து வென்றது. ஸ்டாய்னிஸ் 50 ரன் (44 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 59* ரன் (37 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். ஹரிஸ் ராவுப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஸ்டார்ஸ் அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.


Tags : Melbourne Stars , Melbourne , Maxwell
× RELATED ஸ்டாய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி