ஏடிபி கோப்பை நடால் அபாரம்

பெர்த் நகரில் ஜப்பான் அணியுடன் நடந்த ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் ஆட்டத்தில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட்களில் யோஷிஹிடோ நிஷியோகாவை வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 8 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னதாக ஸ்பெயின் வீரர் பாடிஸ்டா அகுத் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் கோ சோயடாவை வென்றார். இந்த வெற்றியின் மூலமாக ஸ்பெயின் அணி கால் இறுதிக்கு முன்னேறியது.

Related Stories: