×

ஐசிசி டெஸ்ட் தரவரிசை டாப் 10ல் பென் ஸ்டோக்ஸ்: லாபுஷேன் முன்னேற்றம்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில், இங்கிலாந்து அணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார். ஐசிசி நேற்று வெளியிட்ட பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 928 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸி. வீரர் ஸ்டீவன் ஸ்மித் (911) 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், மார்னஸ் லாபுஷேன் (827) ஒரு இடம் முன்னேறி நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனை (814) 4வது இடத்துக்கு தள்ளினார். ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர் (793) 5வது இடத்துக்கு முன்னேறியதை அடுத்து இந்தியாவின் செதேஷ்வர் புஜாரா (791) 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடந்த 2வது டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (708) 10வது இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சு தரவரிசையில், ஆஸி. வேகம் பேட் கம்மின்ஸ் (904) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ஜஸ்பிரித் பூம்ரா ஒரு இடம் பின்தங்கி 6வது இடத்தை பிடிக்க, ஆர்.அஷ்வின், ஷமி 9வது மற்றும் 10வது இடத்தை தக்கவைத்துள்ளனர். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2வது இடத்திலும், ஆர்.அஷ்வின் 5வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

அணிகள் டாப் 10
ரேங்க்    அணி        புள்ளி
1    இந்தியா        120
2    ஆஸ்திரேலியா    108
3    நியூசிலாந்து    105
4    தென் ஆப்ரிக்கா    102
5    இங்கிலாந்து    102
6    இலங்கை        92
7    பாகிஸ்தான்    85
8    வெஸ்ட் இண்டீஸ்    81
9    வங்கதேசம்    60
10    ஆப்கானிஸ்தான்    49

பேட்டிங் டாப் 10
ரேங்க்    வீரர்            புள்ளி
1    விராத் கோஹ்லி (இந்தியா)    928
2    ஸ்டீவன் ஸ்மித் (ஆஸி.)    911
3    மார்னஸ் லாபுஷேன் (ஆஸி.)    827
4    கேன் வில்லியம்சன் (நியூசி.)    814
5    டேவிட் வார்னர் (ஆஸி.)    793
6    செதேஷ்வர் புஜாரா (இந்தியா)    791
7    பாபர் ஆஸம் (பாகிஸ்தான்)    767
8    ஜோ ரூட் (இங்கிலாந்து)    761
9    அஜிங்க்யா ரகானே (இந்தியா)    759
10    பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)    708

பந்துவீச்சு டாப் 10
ரேங்க்    வீரர்                புள்ளி
1    பேட் கம்மின்ஸ் (ஆஸி.)        904
2    நீல் வேக்னர் (நியூசி.)            852
3    ஜேசன் ஹோல்டர் (வெ.இண்டீஸ்)    830
4    காகிசோ ரபாடா (தென் ஆப்.)        821
5    மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.)        796
6    ஜஸ்பிரித் பூம்ரா (இந்தியா)        794
7    ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து)    791
8    வெர்னான் பிலேண்டர் (தென் ஆப்.)    786
9    ஆர்.அஷ்வின் (இந்தியா)        772
10    முகமது ஷமி (இந்தியா)        771

ஆல் ரவுண்டர் டாப் 10
ரேங்க்    வீரர்                புள்ளி
1    ஜேசன் ஹோல்டர் (வெ.இண்டீஸ்)    473
2    ரவீந்திர ஜடேஜா (இந்தியா)        406
3    பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)        395
4    வெர்னான் பிலேண்டர் (தெ.ஆப்.)        337
5    ஆர்.அஷ்வின் (இந்தியா)        308
6    மிட்செல் ஸ்டார்க் (ஆஸி.)        298
7    பேட் கம்மின்ஸ் (ஆஸி.)        266
8    கிராண்ட்ஹோம் (நியூசிலாந்து)        263
9    ரோஸ்டன் சேஸ் (வெ.இண்டீஸ்)        238
10    கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து)        219



Tags : Ben Stokes , ICC Test Rankings, Ben Stokes, LaBushane
× RELATED இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி பேட்டிங்