×

தங்கம் சவரனுக்கு 272 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு 528 அதிகரித்து 31,432க்கு விற்கப்பட்டது. மாலையில்  அதைவிட 256 குறைந்து 31,176க்கு விற்பனையானது. ஈரான் ராணுவ படை தளபதி கொல்லப்பட்டதை தொடர்ந்து, கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 3ம் தேதி அதிரடியாக ஒரு சவரன் தங்கம் 632 அதிகரித்து ₹30,520க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் திடீரென சவரனுக்கு 264 குறைந்து 30,904க்கு விற்கப்பட்டது.
 இந்நிலையில் ஈரான் ராணுவம் அமெரிக்க வீரர்கள் மீது 22 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க ராணுவத்தினர் 80 பேர் கொல்லப்பட்டனர் என ஈரான் தொலைக்காட்சியில் தகவல்கள் வெளியாகின. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே போர் அபாயம் மிகுந்த உச்சக்கட்டத்துக்கு சென்றது.

இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) தங்கம் 1,612 டாலர் வரை சென்றது. அதாவது, முதல் முறையாக 1,600 டாலரை தாண்டியது. இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை வர்த்தகம் துவங்கியபோது, தங்கம் கிராமுக்கு 66 மற்றும் சவரனுக்கு 528 அதிகரித்து 31,432க்கு விற்கப்பட்டது. இது நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், பின்னர் சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 1,567 டாலராக குறைந்தது.
இதையடுத்து சென்னையிலும் நேற்று மாலை தங்கம் கிராமுக்கு 32 சவரனுக்கு 256 குறைந்தது. சவரன் 31,176க்கு விற்பனையானது. இது நேற்று முன்தினம் விலையை விட 272 உயர்வாகும்.

Tags : Gold, price rise
× RELATED தங்கம் விலையில் அதிரடி மாற்றம் சவரன்...