×

எஸ்சி கிறிஸ்தவர் இடஒதுக்கீடு மத்திய அரசு பதில் தர நோட்டீஸ்

புதுடெல்லி: தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கான தேசிய கவுன்சில் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில், “மற்ற மதங்களை தழுவிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருப்பது போன்று எங்களுக்கும் அரசு சார்ந்த அனைத்து சலுகைகளும் கிடைக்க1950ம் ஆண்டு சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட அந்த பத்தியை மட்டும் நீக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கவுன்சில் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் பிராங்கிளின் ஆகியோர், “தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறினாலும், எந்த உயர் நிலைக்கு சென்றாலும் அவர்கள் எதிர்கொள்ளும் தீண்டாமை மாறுவதில்லை. மேற்கண்ட சட்டத்தால் பாகுபாடு மட்டும் தான் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை திருத்த வேண்டும்’’ என வாதிட்டனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags : Central Government ,SC Christian Reservation , SC Christian Reservation, Central Government Notice ,Response
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...