×

உங்களுக்காக போராடுவோம் : ஜேஎன்யூ.வில் கனிமொழி உறுதி

புதுடெல்லி: ‘டெல்லியில் முகமுடி அணிந்த மர்ம கும்பலால் மாணவர்கள் தாக்கப்பட்ட நிலையில் பல்கலைக் கழக மாணவர்களுக்காக திமுக போராடும்,’ என எம்பி கனிமொழி ெதரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கடந்த ஞாயிறன்று முகமுடி அணிந்த மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் மாணவர்கள், ஆசிரியர்கள் காயமடைந்தனர்.  இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட ஜேஎன்யூ.வின் சமர்பதி மாணவர்கள் விடுதியை திமுக எம்பி கனிமொழி நேற்று பார்வையிட்டார். தாக்குதல் குறித்து மாணவிகளிடம் கேட்டறிந்தார். அப்ேபாது மாணவிகள், “தாக்குதல் நடத்தியவர்களுக்கு அனைத்தும் தெரிந்துள்ளது. பல்கலைக் கழக பாதுகாவலர்களின் உதவியுடன் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,” என்றனர்.

பின்னர், மாணவிகளிடம் பேசிய கனிமொழி, “ ஒட்டு மொத்த நாடும் உங்களுடன் உள்ளது. உங்கள் மனதை தளர விடாதீர்கள், ஏராளமானவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுப்போம். உங்களுக்காக போராடுவோம்,” என்றார். மேலும், காயமடைந்துள்ள பல்கலைக் கழக மாணவர் சங்க தலைவர் ஐஷே கோசையும் அவர் சந்தித்து பேசினார்.

Tags : JNU , fight for you, Confirmation , JNU
× RELATED மாணவர் சங்க தேர்தலில் ஜேஎன்யூ...