நோபல் பரிசு பெற்றவர் 5 மணி நேரம் தவிப்பு

கடந்த 2013ம் ஆண்டு வேதியியலில் நோபல் பரிசு பெற்றவர் மைக்கேல் லெவிட் (72). தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இவர் கேரள பல்கலைக்கழகம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கொச்சி வந்திருந்தார். நேற்று ஆலப்புழாவில் மனைவி உட்பட சிலருடன் படகில் உல்லாச பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த போராட்டக்காரர்கள் படகை இயக்கக் கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படகு நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு படகு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் பல மணி நேரம் அவர்கள் படகில் தவித்தனர். போராட்டத்தில் இருந்து சுற்றுலா துறைக்கு விலக்கு அளிக்கப்படும் என்று  போராட்டக்காரர்கள் கூறியிருந்தனர். ஆனால் அதற்கு மாறாக நடந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>