×

அதிகம் தண்ணீர் குடிப்பதால் வந்தது ஆபத்து 10,000 ஒட்டகங்களை ‘போட்டுத்தள்ள’ ஆஸ்திரேலியா அரசு கொடூர முடிவு

மெல்போர்ன்: ஒட்டகங்கள் அதிகளவில் தண்ணீர் குடிப்பதால், நாட்டில் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலைவன கப்பல்கள் என்று அழைக்கப்படுபவை ஒட்டகங்கள். இவை தண்ணீரை குடிக்கும் ஒரே நேரத்தில் பல லிட்டரை தன் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும். இதனால், நீண்ட நேரம் வரையில் இதனால் தண்ணீர் குடிக்காமல் பாலைவனத்தில் பயணிக்க முடிகிறது. இதுதான் ஒட்டகத்தின் விசேஷம். ஆனால், மற்ற விலங்குகளால் ஓரளவுக்கு மீறி தண்ணீரை குடிக்க முடியாது. ஆனால், ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்கள் அதிகளவில் தண்ணீரை காலி செய்வதால் அதற்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தெற்குபகுதியில் சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ள அந்நாட்டு அரசு, ஐந்து நாளில் இந்த இனப்படுகொலையை செய்து முடிக்கவும், ஹெலிகாப்டரில் பறந்தபடி துப்பாக்கிகள் மூலம் அவற்றை சுட்டுக்ெகால்லும் பணியை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் பெரல்வகை ஒட்டகங்கள் அதிகம் வாழ்கின்றன. இவை சாதாரண ஓட்டகங்களை காட்டிலும் மிக அதிகளவில் தண்ணீர் குடிப்பதால், அது மனிதர்களின் தேவையை காலி செய்து விடுகின்றன என்று குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக வறட்சிக்காலங்களில் இதனால் அதிகம் பாதிப்பு ஏற்படுவதால், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதேசமயம், ஒரு இனத்தின் குணாதிச யத்தை வைத்து அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி சுட்டுக்ெகால்வது மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்ட செயல் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Tags : Government ,Australian , Risk of drinking too much water , 10,000 camels
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்