×

இருவருக்கு வெற்றி சான்றிதழ் ரத்து செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு உள்ளதா?

மதுரை: சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு, 2 பேர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து முதலில் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்ட தேவி, ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், 2வதாக வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்ட பிரியதர்சினி, நாளை (ஜன.10) வரைபதவியேற்க தடை விதித்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில். ‘‘ஒருவர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கிய பிறகு அதை ரத்து செய்து, வேறொருவருக்கு சான்றிதழ் வழங்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை.

அப்படி செய்த செயல் சட்ட விரோதமாகும்’’ என வாதிடப்பட்டது.  அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘ஒருவரின் வெற்றியை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் வழக்கை விசாரிக்கும் மாவட்ட நீதிபதிக்கு தான் உள்ளது. அந்த அடிப்படையில் தான் இந்த நீதிமன்றம் தேர்தல் தொடர்பான பல வழக்குகளை தள்ளுபடி செய்து, மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட உத்தரவிடப்படுகிறது. அப்படியிருக்கும்போது, எப்படி தேர்தல் அதிகாரி ஒருவர் வெற்றி பெற்றதை ரத்து செய்தார்? அந்த அதிகாரம் அவருக்கு உள்ளதா?’’ என கேள்வி எழுப்பி தடையை நீட்டித்து, விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags : Commission , Commission , authority to revoke , Success Certificate?
× RELATED மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க...