×

கந்துவட்டிக்கொடுமையால் கணவர் தற்கொலை குழந்தைகளின் பசியை போக்க தலைமுடியை விற்ற இளம்பெண் : பேஸ்புக் மூலம் சமூக ஆர்வலர்கள் உதவி

சேலம்: சேலத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவர் தற்கொலை செய்து கொண்டதால் வறுமையின் பிடியில் சிக்கிய பெண், 3 குழந்தைகளின் பசியை போக்க தலைமுடியை விற்பனை செய்து உணவு வழங்கினார். சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம்(37). இவரது மனைவி பிரேமா(31). இவர்களுக்கு மூன்று மகன்கள். வீமனூர் பகுதியில் கடந்த 2015ல் செங்கல் சூளையில் பணியாற்றியபோது, உரிமையாளரிடம் செல்வம் கடன் வாங்கினார். இதேபோல் பல இடங்களிலும் 4.50 லட்சம் கடன் வாங்கிய செல்வம், திருப்பித்தர முடியாத நிலையில் மனமுடைந்து 7 மாதங்களுக்கு முன்பு  தீக்குளித்து  தற்கொலை செய்து கொண்டார்.  வீமனூரில் உள்ள செங்கல் செங்கல் சூளையில் பிரேமா கூலி வேலைக்கு சென்று வருகிறார். இதனிடையே, பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் பிரேமாவும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சூளையில் இருந்தவர்கள் அவரை காப்பற்றினர். பசியால் 3 குழந்தைகளும் துடித்துள்ளன. இதனால் பிரேமா மொட்டை அடித்து தனது தலைமுடியை 150க்கு விற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார்.  இதையறிந்த அதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பிரேமாவை சந்தித்து உணவுக்கு ஏற்பாடு செய்தனர். பின்னர் அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் பேசி, பணத்தை கொடுக்கும் நடவடிக்கை மேற்கொண்டர். இதுகுறித்து சமூக ஆர்வலர் பாலா பேஸ்புக்கில் பதிவிட்டார். இதன் மூலம் 1 லட்சத்திற்கு மேல் பணம் கிடைத்துள்ளது. மீதமுள்ள பணத்தை பாலா மற்றும் அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்து, பிரேமாவுக்கு கடன் கொடுத்தவர்களிடம் வழங்கியுள்ளனர்.

Tags : Teenagers ,activists ,children ,suicide , young woman,sold her hair , children's hunger , husband's suicide
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...