வங்காள தேச முதியவர் பலி

மீனம்பாக்கம்: வங்காள தேசத்தை சேர்ந்தவர் பரூக் அகமது (73).  கேன்சர் நோயாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சென்னை வந்தார். இவருடைய தங்கையும் வந்திருந்தார். பரூக் அகமது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.  நேற்று காலை 5.25 மணிக்கு கொல்கத்தா செல்ல  விமான நிலையம் வந்தனர். அப்போது பரூக் அகமது திடீரென கீழே விழுந்தார். அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.  பிரேத பரிசோதனை முடிந்து அவரது சடலம் சரக்கு விமானத்தில் வங்காளதேசம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Bengal , Elderly man killed . Bengal
× RELATED சீட் பிடிப்பதில் தகராறு ஓடும் ரயிலில் ஒருவர் அடித்துக்கொலை