×

மீன்வள பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம்

சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் நேற்று, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக (திருத்த) சட்டமுன்வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயரானது 16-2-2018 முதல் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகமானது, ஒரு மாநில அரசின் நிதி பெறும் பல்கலைக்கழகமாகும். நிதிகள் அரசால் ஒதுக்கப்படுகின்றன. அரசு நிதியின் பயன்பாட்டை கண்காணிப்பதற்காக, ஆய்வு மற்றும் விசாரணை மீதான அதிகாரத்தை அரசிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தராக பணியமர்த்துவதற்கான நபர்களை தேர்வு செய்ய வல்லுநர் குழுவில், அரசு பிரதிநிதி ஒருவரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவை ஆரம்ப நிலையிலேயே திமுக எதிர்ப்பதாக அறிவித்தது.

Tags : Fisheries University Law in Amendment , University of Fisheries, Law, Amendment
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...