மீன் சாப்பிட்டால் மாரடைப்பு வராது

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காட்டுமன்னார்கோவில் (அதிமுக) முருகுமாறன் கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “ மீன் சாப்பிடுவதால் மாரடைப்பு வராது. புற்றுநோய் வராது. கண் பாதிப்பு வராது. மீன் உணவை நான் சாப்பிட்டதால்தான் 55 வயதுக்குப் பிறகே கண்ணாடி போட்டுக் கொண்டேன். மீனில் அவ்வளவு சத்து உள்ளது. தமிழகத்தில் இருந்து 5 லட்சம் டன் மீன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி அன்னிய செலாவணி கிடைக்கிறது” என்றார்.

Tags : Eating fish does not cause a heart attack
× RELATED திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்...