×

பேய்க்குளத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

சாத்தான்குளம்: ஸ்ரீவைகுண்டம் பொன்னங்குறிச்சியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பேய்க்குளம், சாத்தான்குளம், உடன்குடி பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேய்க்குளம் தொம்மையார்புரத்தில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு உண்டாகி தண்ணீர் வீணாகி வருகிறது. குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் தொம்மையார்புரம் பகுதிக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் கிராமமக்கள் உடைப்பை சீர் செய்ய குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் புகார் தெரிவித்தனர்.

ஆனால் இன்னும் சீரமைக்கப்படவில்லை. 20 நாள்களாக உடைப்பு உண்டான பகுதியில் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே, அதிகாரிகள் பார்வையிட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீர் செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : Pond , Drinking,wasted water , pond
× RELATED நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்