×

விழுப்புரம், கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை அமைக்க ஐகோர்ட் இடைக்கால தடை

சென்னை: விழுப்புரம், கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை அமைக்க ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. நிலம் கையாக்கப்படுத்துவதற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நான்கு வழிச்சாலைத் திட்டப் பணி


விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினத்துக்கு நான்கு வழிச்சாலைத் திட்டப் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 180 கி.மீ. தொலைவிலான இந்த நான்கு வழிச்சாலைப் பணி ரூ.6,451 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இது தற்போது, 194 கி.மீ. தொலைவாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஐகோர்ட் இடைக்கால தடை

இந்நிலையில் சுற்றுசூழல் மற்றும் கடலோர ஒழுங்காற்று அமைப்பின் அனுமதி பெறவில்லை என்றும் முறையான அனுமதி பெறாமல் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடரக் கூடாது என்றும் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை அமைக்க ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.

அத்துடன் சாலை திட்டத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் ஒப்புதலை பெறும் வரை 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்கள, அதாவது 1 மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக 10 மரங்கள் அமைப்பதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும், அதை மேற்பார்வை செய்ய ஒரு வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : routes ,Villupuram ,Nagapattinam Villupuram ,Chidambaram ,Cuddalore ,Nagapattinam , ICORT, Interim, Prohibition, Road, Villupuram, Cuddalore, Chidambaram, Nagapattinam
× RELATED கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்