×

கோவையில் விறுவிறுப்பாக நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்: முதன் முதலாக மிதவை நடைப்பாதை அமைப்பு

கோவை:  கோவையில் ஸ்மாட் சிட்டி திட்டத்தின்  ஒருபகுதியாக வாலாங்குளத்தில் மிதவை நடைப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள குளங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றனர்.  அதன் ஒருபகுதியாக உக்கடம் பைப்பாஸ் சாலை அருகே உள்ள வாலாங்குளம்,  23 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மேம்பாட்டின் ஒரு பகுதியாக  குளத்தை சுற்றிலும் உள்ள குளக்கரை கான்கிரீட் கொண்டு பலப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் அமர்ந்து குளத்தின் அழகை கண்டு ரசிக்கும் வண்ணம் இருக்கைகள்,  உணவு வழங்க மற்றும் உண்ண இடங்கள், குழந்தைகள் விளையாட தனி இடம் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரையில் இருந்து 50 மீட்டர் நீளத்திற்கு குளத்திற்குள் சென்று குளத்தின் அழகை ரசிக்கும் விதமாக இந்த நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் குளத்தினுள் செல்ல 12அடி அகலத்தில் மிதவை நடைப்பாதையின் பக்கவாட்டு பகுதிகளில் பாதுகாப்பு அம்சத்திற்காக கைப்பிடிகள் அமைக்கப்படுகின்றன. மிதவை நடைப்பாதை காற்றடைத்த கேன்களால் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.  மழைக்காலம் வந்தால் நடப்பவர்கள் வலுக்கிவிழாத நிலையில் கேன்கள் மீது ரப்பர் அட்டை பொருத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆதலால் மிதவைப்பாதை அமைக்கும் பணி மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனால் கோவையில் சுற்றுலாத்தலங்கள் குறைவாக இருக்கிறது என்று புலம்பித்தவித்த சுற்றுலா பிரியர்களுக்கு நிச்சயம் இந்த குளக்கரைகள் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags : Goa , Coimbatore, Smart City Functions, Float Walk, Organization
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...