×

பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் :அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று
அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தடயவியல் ஆய்வகங்கள் அமைத்து அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்கு கால தாமதம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்து அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்தது. அப்போது பல்வேறு அம்சங்கள் அடங்கிய உத்தரவுகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்தனர்.

அதில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்காக உரிய தடயவியல் ஆய்வகங்கள் அமைத்து அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஏனெனில் பல்வேறு மாநிலங்களில் இந்த தடயவியல் ஆய்வகங்கள் பற்றாக்குறை இருப்பதால் பாலியல் வழக்குகளின் விசாரணை காலதாமதம் ஆவதை நீதிமன்றம் தற்போது கருத்தில் கொண்டு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.


Tags : trial ,Supreme Court ,states , Sex, Bribery, Forensics, Labs, Supreme Court, Order
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...