×

சொந்த விருப்பு வெறுப்புகளை பொது நிகழ்வுகளில் வெளிப்படுத்துவது நல்ல தல்ல : விசா வழங்க மறுத்த அமெரிக்காவுக்கு ஈரான் அமைச்சர் கண்டனம்

வாஷிங்டன் : ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்க இருந்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அமெரிக்கா விசா மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நாளை நடைபெறும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஷாரீப் பங்கேற்க இருந்தார். ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை குறித்து தமது தரப்பு வாதத்தை சர்வதேச சமூகத்திடம் ஜாவத் ஷாரீப் முன்வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு விசா வழங்க அமெரிக்கா திடீரென மறுத்து விட்டது. தமது வருகையை கண்டு அமெரிக்கா அஞ்சுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள ஷரீஃப் விசா மறுக்கப்பட்டு இருப்பது ட்ரம்ப் நிர்வாகத்தின் தோல்வியை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஐ.நா.பொதுச் செயலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிகாரிகள், இரு நாடுகளுக்கு இடையேயான பதற்ற நிலை காரணமாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு விசா மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. மேலும் போர் பதற்றம் எதிரொலியாக இஸ்ரேல், பாலஸ்தீனம் போன்ற நாடுகளுக்கு பயணம் செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தமது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.விசா மறுக்கப்பட்டது குறித்து ஈரான் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,எதற்காக அமெரிக்கா அஞ்சுகிறது.எனக்கு விசா மறுத்துள்ளது அமெரிக்கா.அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.சொந்த விருப்பு வெறுப்புகளை அமெரிக்கா பொது நிகழ்வுகளில் வெளிப்படுத்துவது நல்ல தல்ல என்றார்.


Tags : minister ,events ,Iranian ,US , US, Iran, Minister, Condemnation, Visa, UN Security Council
× RELATED ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும்...