×

காளையார்கோவிலில் பூட்டியே கிடக்கும் சிறுவர் பூங்கா: பொருட்கள் சேதமாகி வருவதால் மக்கள் கவலை

காளையார்கோவில்: காளையார்கோவிலில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் அங்குள்ள பொருட்கள் சேதமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகில் கடந்த ஜூன் மாதம் (2019) புதிய தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் சேர்த்து ரூ.30 லட்சம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு பூங்கா, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் உடற்பயிற்சி கூடம், வாக்கிங் பாதை, கழிப்பறை போன்றவை அமைக்கப்பட்டது.

இவை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பூங்காவில் உள்ள உடற்பயிற்சி உபகரணங்கள், கழிப்பறை கதவுகள் உள்பட பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்து வருகின்றன. தவிர மாலைநேரங்களில் இப்பூங்கா சமூகவிரோதிகளின் கூடாராமாகவும் மாறி வருகிறது. மேலும் பூங்காவை சுற்றி அமைக்கப்பட்ட மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர்.

விடுமுறை நாட்களில் பூங்காவை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலிகள் மீது ஏறி ஆபத்தான முறையில் உள்ளே குதித்து விளையாடி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல லட்சம் செலவில் கட்டப்பட்டு வீணாகி வரும் பூங்காவை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : children ,park ,Kaliyarikovil ,Locked Up Children's Park , In kalaiyarko, children's park
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்