×

நகராட்சி பகுதியில் குப்பைகளை அகற்றாததால் மலை போல் குவிந்து சீர்கேடு

கரூர்: கரூர் நகராட்சி பகுதியில் குப்பைகளை அவ்வப்போது அகற்றாததால் குவிந்து சுகாதார கேடு ஏற்படுகிறது. கரூர் நகராட்சி பகுதியில் கரும்புச்சாறு கடைகள் 15க்கும் மேல் செயல்படுகின்றன. இப்பகுதியில் சேகரமாகும் கரும்பு சக்கைகளை அந்தந்த பகுதியில் அருகாமையில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளில் கொட்டி வந்தனர். குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடங்களில் அவை அகற்றப்பட்டு விட்டன. இதனால் நகராட்சிபணியாளர்கள் வந்து குப்பைகளை பெற்றுச்செல்கின்றனர். இவர்கள் 4 நாளைக்கு ஒரு முறை அல்லது 3 நாளைக்கு ஒருமுறையே வருகின்றனர். இதனால் மூட்டைகளில் வைக்கப்பட்டுள்ள கரும்புசக்கைகள் மக்க ஆரம்பித்து கெட்டவாடை வீசி சுகாதார கேடு ஏற்படுகிறது.

அவ்வப்போது குப்பைகளை அகற்ற வேண்டும். தொட்டிகளை அகற்றி விட்டதால் எங்கு போய் கொட்டுவது என தெரியவில்லை. இதற்கு நகராட்சி நிர்வாகம் தீர்வுகாண வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் வெங்கமேடு திட்டச்சாலை பகுதியில் குப்பைகள் அகற்றப்படாததால் மலைபோல குவிந்து விட்டது. இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டது. மேலும் குப்பை கொட்ட இடமின்றி அதன்மீதே பொதுமக்கள் கொட்டினர். மேலும் வெங்கமேடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கீழ்புறம் குப்பை மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டிருந்தன. சுகாதாரகேடு கண்டித்து பொதுமக்கள் போராட்டம் அறிவித்ததையடுத்து இந்த குப்பைகள் தற்போது அள்ளப்பட்டு வருகின்றன,

ஈசுவரன் கோயில் பகுதியில் குப்பைகளால் சுகாதாரகேடு

கரூர் ஈசுவரன்கோயில் பக்கவாட்டில் ஒரு குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. கோயில் அன்னதானம், பிரசாதம் வழங்குதல் போன்ற இலைகள் இங்கு கொட்டப்படுகின்றன. அருகில் உள்ள கட்டிடங்களிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவை முறையாக அகற்றப்படவில்லை. இதனால் குப்பை தொட்டி வழிகிறது. மேலும் வேறு பகுதியில்உள்ள குப்பைகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இதனால் கோயில் புனிதம் கெட்டு துர்நாற்றம் சுகாதாரகேடு ஏற்படுகிறது. குப்பை தொட்டிகளை அகற்றியதால் ஆங்காங்கே குப்பைகள் கொட்டி எரிக்கப்படும் நிலைஉருவாகியுள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Tags : area , Municipal area, garbage, disorder
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...