×

நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு கடை பொக்லைன் உதவியுடன் அகற்றம்: அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

கரூர்: கரூர் நகராட்சி ஆக்கிரமிப்பு கடை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவைக்கேட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணாசிலை அருகேயும் பத்திரப்பதிவு அலுவலகம் எதிர்புறமும் நகராட்சி அனுமதியுடன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நகரமைப்பு அலுவலர் அன்பு, டவுன் போலீசாருடன் நேற்று வந்தனர். ஆஸ்பத்திரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒருகடையை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தனர். நகராட்சி நிர்வாகத்தினால் கொடுக்கப்பட்ட பெட்டி மட்டுமே இருக்க வேண்டும். மற்ற கட்டுமானங்கள் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் ஒரு கடை திமுக மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி நடத்துவது என்பதால் அங்கு கட்சியினர் குவிந்தனர். வக்கீல்களும் வந்தனர். நகராட்சி அதிகாரிகளிடம் கோர்ட்டு உத்தரவைக் காண்பிக்குமாறு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஒரு கடை நகராட்சியால் அனுமதிக்கப்பட்ட இடம் அளவுக்கே கட்டப்பட்டிருக்கிறது என அலுவலர்கள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்சனையால் அப்பகுதியில ஒருமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வாடகை பாக்கி செலுத்தாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும்

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கரூர் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட குத்தகை இனங்களில் வாடகை பாக்கி உள்ள கடைகளை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான கடைஉரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையினை உரிய காலத்தில் செலுத்தாததால் நகராட்சிக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி கடைகளின் உரிமதாரர்கள் அவரவர் கடைகளுக்கான நாளது தேதி வரையிலான வாடகை நிலுவைத்தொகையினை உடனடியாக செலுத்தி, சட்டப்படியான மேல்நடவடிக்கைகளை தவிர்த்து, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

Tags : area ,Occupy Shop Bouquetline ,Militant Evacuation ,Governments , Municipal area, occupation, displacement, argumentation
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...