கும்பகோணம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்... கைகளில் கருப்புக்கொடி ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கம்

கும்பகோணம் : கும்பகோணம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வயலில் இயங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய விவசயிகள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நகை கடன் உள்ளிட்ட கடன்களுக்கு வட்டி விகிதம் குறைக்க வேண்டும். மேலும் பயிர்கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தக்கப்பட்டது.

தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக உயர்ச்சி வழங்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 


Tags : Farmers protests ,Kumbakonam ,protests ,government , Farmers, Kumbakonam , government
× RELATED கும்பகோணத்தில் 63 ஆண்டுக்கு முன்...