×

சிறுகுன்றா எஸ்டேட் பஜாரில் ரேஷன் கடையை உடைத்து யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் பீதி

வால்பாறை: வால்பாறை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பஜாரில் காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வால்பாறை வனப்பகுதியில் யானைகள், சிறுத்தை, கரடி, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குள்ள உள்ளன. இவை அவ்வப்ேபாது வனங்களில் இருந்து வெளியேறி இறை உண்பதற்காக குடியிருப்பு, தேயிலைதோட்டம், ரேஷன் கடைளில் உள்ளிட்டவற்றையில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாக உள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் வால்பாறை அடுத்துள்ள சிறுகுன்றா எஸ்டேட் பஜாரில் 4க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தன. பின் அங்கு இருந்த ரேஷன் கடையை உடைத்து உள்ளே இருந்த அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வாரி இறைத்து சாப்பிட்டும் வீசியும் சேதப்படுத்தி உள்ளன.

மேலும், அருகில் இருந்த மளிகைக்கடை, டீக்கடைகளையும் உடைத்து சேதப்படுத்தின. இதனால் அப்பகுதியில் மக்கள் பீதியடைந்து குடியிருப்புகளிலேயே தஞ்சமடைந்தனர். இதையறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்ட அப்பகுதியில் அதிகாலை முதலே முகாமிட்டனர். இருப்பினும் வனத்துறையினருக்கு டிமிக்கி கொடுத்த யானைகள் தொழிலாளர் குடியிருப்புகள் வழியாக புகுந்து அப்பகுதியில் உள்ள வனத்துறை  ஆய்வு மாளிகையை முற்றுகையிட்டவாறு நின்றன. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள், காட்டு யானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இச்சம்பவத்தால் எஸ்டேட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : ration shop ,panic , Estate bazaar, ration shop, elephants, public
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா