×

முதல்முறையாக ஜம்மு காஷ்மீரின் உண்மை நிலையை நேரில் காண வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை காஷ்மீர் செல்ல வெளிநாட்டு தூதர்கள் 15 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 15 நாடுகளின் தூதர்கள் காஷ்மீர் சென்று நிலைய பார்வையிட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. முதல்முறையாக ஜம்மு காஷ்மீரை சுற்றி பார்க்க வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் 20 பேர் அடுத்த சில நாட்களில் காஷ்மீருக்கு வர உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனம், பாகிஸ்தானின் தலையீடு போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட மத்திய அரசு தற்போது வெளிநாட்டவர்கள் காஷ்மீரில் நேரில் ஆய்வு நடத்த அழைப்பு விடுத்துள்ளது. பன்னாட்டு உயரதிகாரிகள் குழுவை காஷ்மீர் சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு தூதர்கள் 20 பேர் மற்றும் மூத்த  அதிகாரிகள் குழுவினர் காஷ்மீரை நேரில் பார்த்து அங்குள்ள வியாபாரிகள், ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் பேச்சு நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தால் அமைதிக்கு பாதகம் ஏற்படுவதையும், குழுவினர் நேரில் கண்டறிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Government ,diplomats ,Jammu and Kashmir , First time, Jammu and Kashmir, reality, foreign diplomat, central government clearance
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!