×

மூணாறில் ஓடையில் மிதக்கும் மதுபாட்டில்கள்: குடிமகன்கள் அட்டகாசம்

மூணாறு: மூணாறு அருகில் அமைந்துள்ள ராஜகாடு ஓடை குப்பைகள், மது பாட்டில்கள் மற்றும் கழிவுகளால் நிறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் ஓடைகளில் குடிநீர் எடுத்து செல்லும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாய நிலை உருவாகியுள்ளது. மூணாறில் சமீபத்தில் “இனி நதிகள் தடை இல்லாமல் “ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மூணாறு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நதிகள் மற்றும் ஓடைகளை தூய்மைப்படுத்தும் பணி பஞ்சாயத்து ஊழியர்கள் மூலம் நடைபெற்றது.

இந்நிலையில் மூணாறு அருகில் அமைந்துள்ள ராஜாகாடு பகுதியில் அமைந்துள்ள முக்கிய ஓடையில் கழிவுகளும், மது பாட்டில்கள், குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் இந்த ஓடையில் கழிவுகள் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் ெதாற்றுநோய் பரவும் அபாயநிலை உருவாக்குவதாக புகார் தெரிவித்துள்ளனர். எனவே நதிகளை பாதுகாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்திய அதிகாரிகள் ராஜகாடு ஓடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Tags : stream ,Munnar ,Citizens , Munnar, Brewery, Attakasam
× RELATED மூணாறு அருகே துதிக்கையில் காயத்துடன் சுற்றித் திரியும் குட்டி யானை