×

அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கங்களால் குலுங்கிய கரீபியன் தீவு: ஆளுநர் அவசர நிலை பிரகடனம்

வாஷிங்டன்:  பியூர்டோ ரிகோவில் கடந்த 102 ஆண்டுகளில் இல்லாத வகையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ஆளுநர் அவசர நிலையை பிரகனடம் செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், தற்பொழுது திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4  புள்ளிகள் வரை காணப்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனால் கரீபியன் தீவான பியூர்டோ ரிகோவே குலுங்கியது.  இதனையடுத்து அங்குள்ள மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.  

இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தனர்.  மேலும் அவற்றில் 73 வயதான முதியவர் மீது சுவர் இடிந்து விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மின்கம்பங்கள் மற்றும் மின்நிலையங்கள் சேதமடைந்ததால் மிசாரம் துண்டிக்கப்பட்டது.  இதனால் அங்கு அவசர சேவைகள் தவிர, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர நிலைக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு அவசரக்கால தேசிய பாதுகாப்புப்  படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : island ,Caribbean ,Governor ,Emergency ,earthquakes ,Proclamation ,state , Terror, Earthquake, Caribbean Island, Governor, Declaration
× RELATED பிஜி தீவில் இன்று காலை ஏற்பட்ட சக்தி...