×

போர் பதற்றம் அதிகரிப்பால், ஈராக், ஈரான், வளைகுடா நாடுகள் மீது விமானங்கள் பறப்பதை தவிர்க்க சீனா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தல்

சிங்கப்பூர் :  ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகள் மீது பறப்பதை தவிர்க்குமாறு சிங்கப்பூர் விமான நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்- அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவுவதால் அந்நாடுகள் மீது விமானங்கள் பறக்க வேண்டாம் என சீனா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளும் அந்நாட்டு விமானங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. பெர்ஷியா மற்றும் ஓமன் வளைகுடா பகுதி வான்வெளியை பயன்படுத்தவும் தடை  சீனா, அமெரிக்கா, இலங்கை நாடுகள் தடை விதித்துள்ளது.

முன்னதாக இன்று காலை இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஈராக் நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டுமெனவும்  இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை பாக்தாத், ஈர்பில் ஆகிய பகுதியில் உள்ள இந்திய தூதரங்கள் தொடர்ந்து செய்யும் எனவும் மத்திய அரசு அறிவுரை வழங்கி இருந்தது. மேலும் எந்தவித அத்தியாவசிய தேவையின்றி ஈராக் செல்ல வேண்டாம் என்றும் ஈராக் நாட்டில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அந்தந்த நாட்டு மக்களுக்கு அந்தந்த அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.


பல்வேறு நாடுகள் அறிவுரையின் பின்னணி

*ஈராக் தலைநகர் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க படையினர் நடத்திய டிரோன் தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானி, ஈராக் ராணுவ துணை தளபதி  அபு மகதி  உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

*சுலைமானி இறுதிச் சடங்கு நிறைவடைந்துள்ள நிலையில், ஈரான் பழிதீர்க்கும் நடவடிக்கையில் இறங்கும்  என்ற அச்சம் நிலவுகிறது.

*சுலைமானி கொல்லப்பட்டதற்கு ஈரான் ஒரு மிகப்பெரிய எதிர்ப்பை அமெரிக்காவிற்கு எதிராக பதிவு செய்தது. குறிப்பாக அமெரிக்க அதிபரின் தலைக்கு விலை நிர்ணயம் செய்தது ஈரான்.

*இந்நிலையில், ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள அன்பார் மாகாணத்தில்  அடுத்தடுத்து 2 முறை ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அல்-ஆஸாத், இர்பில் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மொத்தம் 12 ஏவுகணைகள் மூலம் அமெரிக்காவுக்கு  பதிலடி தரப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது .

*இதையடுத்து அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே விழுந்து நொறுங்கியது. இதனால் ஈரான், ஈராக் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அமெரிக்கர்கள்,சீனர்கள் உள்ளிட்டோர் குறித்த கவலை தற்போது எழுந்திருக்கிறது. இதையடுத்து பல உலக நாடுகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : countries ,China ,Gulf ,Iraq ,Iran ,Sri Lanka ,event ,United States ,US , Indian Airlines, Iraq, Iran, Gulf, Federal Government, Warning, Singapore, China, USA, Sri Lanka
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...