×

காரியாபட்டி அருகே வாறுகால், சாலை வசதி இல்லை: பொதுமக்கள் வேதனை

காரியாபட்டி: காரியாபட்டி அருகே டி.கடம்பன்குளம் ஊராட்சி கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருவில் ரோடு, மயானம் செல்லும் சாலை, வாறுகால் வசதி இப்படி எந்த அடிப்படை வசதியும் இல்லை. தற்போது மழைக்காலம் என்பதால் தெருக்களில் கழிவுநீருடன் சேர்ந்து சேறும் சகதியுமாக இருப்பதால் நடப்பதற்கும் வாகனத்தில் செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். வார்டு உறுப்பினர் ராமர் கூறுகையில், நான் பத்து ஆண்டுகளாக வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பில் உள்ளேன். இந்த மயான சாலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது நோய் பரப்பும் இடமாக உள்ளது.அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார். நாகராஜ் கூறுகையில், எங்க ஊரில் எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை. ரோடு, ரேசன்கடை, வாறுகால் உட்பட அனைத்தும் எட்டா கனியாக உள்ளது. ஊராட்சி தலைவர் குருவம்மாள், ‘‘பொதுமக்கள் நலனுக்காக சேறும், சகதியுமாக உள்ளதை சரி செய்ய வி.ஏ.ஓ.விடம் அனுமதி கேட்க சென்றால் அலைக் கழிக்கிறார். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்….

The post காரியாபட்டி அருகே வாறுகால், சாலை வசதி இல்லை: பொதுமக்கள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Kariyapatti ,Uppilikundu ,D. Kadampankulam panchayat ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி...