×

நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் ஸ்டாலின் கேள்வி: விஜயபாஸ்கர் பதில்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நீட் விலக்கு கோரி அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு வந்துள்ளதா என்றும் விளக்கம் கேட்டார். நீட் தேர்வு வேண்டாம் என அரசு நிறைவேற்றிய இரண்டு தீர்மானங்களின் நிலை என்ன என்றும் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வை எதிர்ப்பதில் அதிமுக அரசு உறுதியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேரவையில் பதில் அளித்துள்ளார்.


Tags : Stalin ,Vijayabaskar , Neat Select, Convention, Stalin, Vijayabaskar
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...