×

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம்!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இனி குரூப் 1 முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது. அதாவது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மரபு, பண்பாடு, சமூக அறிவியல் இயக்கங்கள், தமிழ்நாட்டின் வரலாறு, தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் ஆகிய பாடங்களை சேர்த்துள்ளதாக தெரிவித்தது. இதனை தொடர்ந்து, தமிழ் தெரியாதவர்கள் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் குரூப் 1 தேர்வுக்கும் அதே பாடத்திட்டம் என்று தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இந்த புதிய பாடத்திட்டத்தில் வரலாறு உள்ளிட்ட சில பாடங்களில்,  பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டு தமிழுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மாற்றி வடிவமைக்கப்பட்ட குரூப் 2 பாடதிட்டத்துடன் இந்த புதிய பாடத்திட்டம் 100 சதவிகிதம் ஒத்து போவதால் குரூப் 2 தேர்வுக்கு தயார் செய்பவர்கள் குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வையும் எளிமையாக அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றும் பழைய பாடத்திட்டமே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DNBSC Group-1 ,TNPSC Group-1 Exam for Curriculum Change , DNBSC, Group-1 Examination, Curriculum, Change
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் புதிய...