×

ஆமை வேகத்தில் குறைந்தாலும் முயல் வேகத்தில் உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.528 உயர்ந்து ரூ.31,432க்கு விற்பனை ; பரிதாபத்தில் நகை பிரியர்கள்

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.31,432க்கு விற்பனையாகி வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.66 உயர்ந்து ரூ.3,929க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை புதிய உச்சம்


சர்வதேச சந்தை நிலவரங்களால் தங்கம்  விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்கதலில் ஈரான் ராணுவ படை தளபதி கொல்லப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக இரு நாடுகளிடையே  ஏற்பட்ட மோதல் போக்கால், சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர்.  கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த  3ம் தேதி அதிரடியாக ஒரு சவரன் தங்கம் 632 அதிகரித்து 30,520க்கு விற்கப்பட்டது. அடுத்தநாள் 136 உயர்ந்து 30,656க்கும், நேற்று முன்தினம் 512 உயர்ந்து 31,168க்கும் விற்பனையானது.  

தங்கத்தின் விலையில் நேற்று சரிவு

இந்நிலையில், நேற்று ஒரு டிராய் அவுன்ஸ் திடீரென 1,554 டாலர் வரை குறைந்தது. இதன் எதிரொலியாக தங்கம் விலை நேற்று  காலை கிராமுக்கு 53, குறைந்து 3,843க்கும் சவரனுக்கு 424 சரிந்து 30,904க்கும் விற்பனையானது. மாலையில் சர்வதேச சந்தையில் மீண்டும் ஒரு டிராய் அவுன்ஸ் 1,570 டாலர் வரை சென்றதால் கிராமுக்கு 20 உயர்ந்தது. இதனால், முந்தைய  நாள் விலையை விட 264 குறைந்து 30,744க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு, நகை பிரியர்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது.

மீண்டும் புதிய உச்சம்...


இதனிடையே ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சுமார் 80 பேர் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக உச்சகட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.31,432க்கு விற்பனையாகி வருகிறது.வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ரூ.52.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.52,600 ஆக உள்ளது.

Tags : lovers ,Jewel ,jewel lovers , Sales, Silver, Price, Jewelry, Gold
× RELATED வங்கியில் பணியாற்றும் நகை...