×

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை: தொழிற்சங்கங்கள் போராட்டம்

புதுச்சேரி:  புதுவை மாநிலத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பந்த் (முழு அடைப்பு) போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. ஏ.ஐ.சி.சி.டி.யூ. ஏ.ஐ.யூ.டி.யூ.சி., எம்.எல்.எப்., எல்.எல்.பி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.  தொழிற்ச்சங்கங்கள் அழைப்பு விடுத்ததால்,  முழு அடைப்பு போராட்டம் காரணமாக,  புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரியில் தொழிற்ச்சங்கங்களின் போராட்டத்தால் பேருந்துகள் இயக்கப்படவில்லை.  புதுச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 2000 வாகனங்களுக்கு மேல் வந்துசெல்லக்கூடிய இடம்.  தற்போழுது முற்றிலுமாக வெறிச்சோடி கிடக்கிறது. புதுச்சேரியில் இன்று காலை முதல் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் தற்பொழுது இயக்கப்படவில்லை.  தமிழக அரசு பேருந்துகள் ஒன்றிரண்டு இயக்கப்பட்டாலும் 8 மணிக்கு பிறகு அவை முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டெம்போ உள்ளிட்டவைகளும் இயக்கவில்லை. பெரும்பாலான,   அனைத்து கடைகளும், பெரிய வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கூடிய குபேர் அங்காடி உள்ளிட்ட அனைத்து அங்காடிகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்குகின்றனர். இருந்தும் 500க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் புதுச்சேரியிலிருந்து பிறவழியாக செல்லப்பட்டிருக்கின்றனர். கடலூர், விழுப்புரம் செல்லக்கூடிய பேருந்துகள் ஓடாதக்காரணத்தினால் புதுச்சேரிக்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய நோயாளிகளும் பேருந்து கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.


Tags : state ,Trade unions ,Puducherry , Puducherry, buses, trade union struggle
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...