×

ஈரானில் 180 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: சுமார் 170 பேர் உயிரிழந்ததாக தகவல்

டெஹ்ரான்: ஈரானில் 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் நொறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 170 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான விபத்தில் பயணிகள் ஒருவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள இந்த சூழலில் மிகப்பெரிய விமான விபத்து நடந்துள்ளது. ஈரான் தலைநகரான டெஹ்ரானில் இருந்து 180 பேருடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த விமானம் சற்று நேரத்தில் விபத்தில் சிக்கியது. இந்த விமானம் போயிங் 737 வகையை சேர்ந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே பயணிகள் விமானம், கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

சமீப நாட்களாக போயிங் விமானம் உலகம் முழுவதும் அதிக விபத்துக்கு உள்ளாகிறது. பொதுவாக போயிங் விமானங்களில் நிறைய கோளாறுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மத்தியில் தான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. ஈரான் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், உக்ரைன் பயணிகள் விமானம் விபத்திற்குள்ளாகி உள்ளது. இதனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதா? அல்லது போர் சூழல் காரணமாக ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, விமான விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு படையினர் சென்று இருக்கிறார்கள். அங்கு ராணுவமும் குவிக்கப்பட்டு அவசர மீட்பு பணிகள் நடந்து வருகிறது. எத்தனை பேர் காயம் அடைந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டெஹ்ரான் விமான விபத்து: 170 பேர் உயிரிழப்பு


டெஹ்ரானில் உக்ரைன் நாட்டு விமானம் விழுந்து நொறுங்கியதில் 170 பேரும் உயிரிழந்தனர். டெஹ்ரான் இமாம் கொமேனி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. உக்ரைன் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறால் விழுந்ததில் பயணிகள், ஊழியர்கள் என 170 பேரும் பலியாகினர்.

Tags : Ukraine ,Iran ,plane crashes , Ukraine plane crash crashes, killing 170 people
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு