×

தொழிலாளர்களுக்கு தலை வணங்குகிறேன்: மோடி-அமித்ஷா தொழிலாளர் எதிர்ப்பு கொள்ளையால் நாட்டில் வேலையின்மை....ராகுல்காந்தி டுவிட்

டெல்லி: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், அடிப்படை ஊதியத்தை அதிகரித்தல், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கேங்வாரை, தொழிற்சங்க  பிரதிநிதிகள் கடந்த வாரம் சந்தித்து பேசினர். இதில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுத்தல், வங்கிகள் இணைப்பை கைவிடுதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த  பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக ஜனவரி 8ம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

இதன்படி, இன்று நாடு தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள்  உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

நாடு தழுவிய முழுகடை அடைப்பு போராட்டத்தால் கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் இருந்து கேரள செல்லும் அனைத்து பேருந்துகளும் தமிழ்நாடு-கேரள எல்லையான  களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. மிகக்குறைந்த அளவு தமிழக அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. தனியார்  பேருந்துகள்இயக்கப்படாததால் தனியார் பள்ளிகளுக்கு  இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் தொழிலாளர்கள் நடத்தி வரும் பாரத் பந்த் குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  அதில், மோடி-அமித்ஷாவின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் பலவீனப் படுத்தப்படுகின்றன என ராகுல் காந்தி குற்றம் சாடியுள்ளார். மோடி-அமித்ஷா தொழிலாளர் எதிர்ப்பு கொள்ளையால் நாட்டில் வேலையின்மை உருவாகியுள்ளது  என்றும் நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்றுள்ள 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுக்காக தலை வணங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Modi-Amit Shah ,country ,Rahul Gandhi Dwight ,Rahul Gandhi , Modi-Amit Shah's anti-worker plunder is unemployment: Rahul Gandhi
× RELATED தமிழ்நாட்டை கண்டு மோடி அமித்ஷாவுக்கு அச்சம்: திருமாவளவன் பேச்சு