×

பூண்டு திருடியவரை நிர்வாணமாக்கி உதை

மாண்ட்சார்: மபி.யின் மாண்ட்சார் நகர சந்தையில் நேற்று முன்தினம் பூண்டு மூட்டையை ஒருவர் திருட முயன்றார். அங்கிருந்தவர்கள்  அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், அவரை நிர்வாணமாக்கியும் தாக்கினர். இந்த  வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாப்பாட்டிற்காக அவர் பூண்டை திருடியது தெரியவந்துள்ளது.


Tags : Garlic, MP
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!