×

நடிகர் ரஜினியின் தர்பார் படத்தை வெளியிட தடை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் ரஜினி நடித்து வெளிவரவுள்ள தர்பார் திரைப்படத்தை  வெளியிட தடையில்லை என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், 4.9 கோடிக்கான வங்கி உத்தரவாதம் தந்தால் மலேசியாவிலும் வெளியிடலாம் என்றும்   உத்தரவிட்டுள்ளது.  நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 9ம்தேதி வெளியாக உள்ள திரைப்படம் “தர்பார்”. இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைக்கா  நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய்., நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ‘ரஜினி நடித்த 2.0 படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை தயாரிக்க 12 கோடியை, ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடன் கொடுத்தோம். அந்த கடன் தொகை வட்டியுடன் 23 கோடியே 70 லட்சத்தை லைக்கா நிறுவனம்  தரவேண்டும். இந்த தொகையை தராமல், படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவில், லைக்கா  நிறுவனம் 4 கோடியே 90 லட்சம் அல்லது அதற்கான வங்கி உத்தரவாதத்தை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் டெபாசிட் செய்யும் பட்சத்தில் மலேசியாவில் படத்தை வௌியிடலாம் என்று உத்தரவிட்டார். மலேசியா தவிர மற்ற இடங்களில்  படத்தை திரையிட எந்த தடையும் இல்லை என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



Tags : Rajini ,release ,Actor Rajini , நடிகர் ரஜினி,தர்பார் ,உயர் நீதிமன்றம்
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...