×

புராதன இடங்கள் மீது தாக்குதல் டிரம்ப் திட்டத்துக்கு பென்டகன் எதிர்ப்பு

வாஷிங்டன்: ‘ஈரானின் கலாச்சார இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்,’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு, அந்நாட்டு ராணுவமே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான்இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள  நிலையில், ‘ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம். கலாச்சார இடங்களும் தாக்கப்படும்,’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். ‘ராணுவ தளங்களை தவிர்த்து, இதுபோன்ற புராதன இடங்கள் மீது  தாக்குதல் நடத்துவது போர்குற்றமாகும்,’ என இதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில், டிரம்பின் இந்த கருத்துக்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க பாதுகாப்பு துறை  அமைச்சர் மார்க் எஸ்பர்  கூறுகையில், ‘‘ஈரானின்  கலாச்சார இடங்கள்  மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது. இதுபோன்ற இடங்கள் மீது தாக்குதல் நடத்துவது   போர் குற்றமாகும். அதுபோன்ற குற்றத்தில் பென்டகன் ஈடுபடாது, என்றார்.  தனது நாட்டின் அதிபர் கூறிய கருத்துக்கே, அமெரிக்க ராணுவ தலைமையகம் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







Tags : Trump ,Pentagon , Heritage sites, anti-Trump, anti-Pentagon
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...