×

உரிமைகளை பறிக்க விடமாட்டேன்: மம்தா

பதர்பிரதிமா: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய  மக்கள்தொகை பதிவு ஆகியவற்றுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். வடக்கு 24  பர்கானா மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட பேரணியில் மம்தா பேசியதாவது:  நான் அதிகாரத்தில் இருக்கும் வரை மாநில மக்களின்  நலனை பாதுகாப்பேன். யாராவது உங்களிடம் இது குறித்த விவரங்களை கேட்டால்,  எந்த தகவலும் அளிக்க  வேண்டாம்.  நான் உங்களுடைய உரிமைகளின் பாதுகாவலர், எனவே, யாரும் அதை பறிக்க விட  மாட்டேன். இவ்வாறு மம்தா பேசினார்.Tags : Mamta , Rights, Mamta
× RELATED 144 தடை உத்தரவு நேரத்தில் அவசிய பொருள்...