×

மத்திய அரசு மனு நிராகரிப்பு

புதுடெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை கட்டணம் 774 கோடிக்கு பதிலாக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், மத்திய அரசின் தொலைத் தொடர்பு துறைக்கு ₹908 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால்  தொலைத் தொடர்பு துறை இந்த முழுத் தொகையையும் எடுத்து கொண்டது. இதில், 30.33 கோடி ஆர்காம் நிறுவனத்துக்கு ஏற்கனவே திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மீதமுள்ள ₹104 கோடியை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்  நிறுவனத்துக்கு திருப்பி செலுத்த தொலைத்தொடர்பு குறைதீர்ப்பு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நேற்று  விசாரித்த நீதிபதிகள் நாரிமன், ரவீந்திர பட், மேல்முறையீடு செய்வதற்கு இதில் ஒன்றுமில்லை’ எனக் கூறி மனுவை நிராகரித்தனர்.


Tags : Central Government ,government , Central Government
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...