×

சங்கராந்தி கொண்டாடாமல் விவசாயிகளுடன் போராட்டம்: சந்திரபாபு அறிவிப்பு

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு, தனது சொந்த ஊரான நாராவாரிபல்லியில் சங்கராந்தி கொண்டாடாமல் விவசாயிகளுடன் போராட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஒவ்வொரு  ஆண்டும் பொங்கல் பண்டிகையை மூன்று நாட்களுக்கு தனது சொந்த ஊரான சித்தூர் மாவட்டம், சந்திரகிரி மண்டலம், நாராவாரிப்பல்லியில் கொண்டாடுவது வழக்கம்.  அப்போது அங்குள்ள தனது பெற்றோர்கள் சமாதிக்கு அஞ்சலி செலுத்தி  பொங்கல் வைத்து உறவினர்கள், நண்பர்களுடன் சந்திரபாபு அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, பேரன் தேவான்ஷ், சம்மந்தியும், என்டி ராமராவின் மகனுமான பாலகிருஷ்ணா மற்றும் குடும்பத்தினருடன்  கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் இந்தாண்டு அமராவதி தலைநகருக்காக நிலம் வழங்கிய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சங்கராந்தி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடாமல் அமராவதி தலைநகருக்காக  போராடி வரக்கூடிய  விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக சந்திரபாபு தெரிவித்துள்ளார். ஏற்கனவே விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் பல இடங்களில் சந்திரபாபு பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இதில், அவரது மனைவி புவனேஸ்வரி போராட்ட செலவு தொகைக்காக தன் 2 வளையல்களை நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.



Tags : Sankranti, peasants, struggle, Chandrababu
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...