×

கடலூரில் பல லட்சம் மதிப்புள்ள திமிங்கலத்தின் கழிவு சிக்கியது: சுங்கத்துறையிடம் ஒப்படைப்பு

கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் வனத்துறைக்கு சொந்தமான சவுக்கு தோப்பில் பல லட்சம் மதிப்பிலான திமிங்கலத்தின் கழிவு (ஆம்பர் கிரீஸ்) கைப்பற்றப்பட்டிருப்பது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்  தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் வனத்துறைக்கு சொந்தமான சவுக்கு தோப்பில்  வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் விசித்திரமாக கிடப்பதாக மீனவர்கள் கண்டுபிடித்தனர். இதனை கைப்பற்றி கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.  இதையடுத்து கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் சங்கீதா  விசாரணை நடத்தினார். இதில் ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தி (கழிவு) என தெரியவந்தது.  இந்த கழிவானது, வைரத்தை பளபளப்பாக்க உதவும். மேலும் மருத்துவ  குணங்களையும் கொண்டது. இது கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என தெரியவந்தது. 5.88 கிலோ எடைகொண்ட, லட்சக்கணக்கில் விலை மதிப்புள்ள அம்பர் கிரீஸ் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறை  அலுவலர்கள் அதை முறைப்படி  சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Tags : millions ,Cuddalore ,Customs Department , Cuddalore, Whale, Waste
× RELATED ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு