×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் விஷம பிரசாரம் செய்கின்றன

* தேசிய துணை தலைவர் பேச்சு
* பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் பாஜகவினர் பேரணி நடத்தினர். இதில் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு முறைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. பேரணி, ஆர்ப்பாட்டம், மறியல், பொதுக்கூட்டம் என்று போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் நாடு முழுவதும் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று மாலை பேரணி நடந்தது. புதுப்பேட்டை ஆதித்தனார் சாலை அருகே தொடங்கிய பேரணி லாங்க்ஸ் கார்டன் சந்திப்பில் முடிவடைந்தது.

பேரணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பாஜக தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.வி.ஹண்டே, வானதி சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பாஜக துணை தலைவர் எம்.என்.ராஜா, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி, மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர், இளைஞர் அணி மாநில செயலாளர் ஜி.கே.எஸ், மாவட்ட பொருளாளர் கருப்பையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் அண்மையில் பாஜகவில் இணைந்த ராதாரவியும் இந்த பேரணியில் பங்கேற்றார். பேரணி முடிவில் பாஜக தேசிய துணை தலைவர் ெஜய் பாண்டா பேசுகையில், “ குடிரியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விஷம பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சட்டம் யாருடைய உரிமையையும் பறிக்காது. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Tags : parties , Political parties,campaigning ,Citizenship Amendment Act
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...