×

நெல்லை கண்ணன் கைதில் உள்நோக்கம் இல்லை : முதல்வர் விளக்கம்

சென்னை:  சட்டப்பேரவையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு குளச்சல் பிரின்ஸ்(காங்கிரஸ்) பேசியதாவது: கோலம் போட்டவர்களை காவல்துறையினர் கைது  செய்தது ஏன்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி: அடுத்தவர் வீட்டில் கோலம் போட்டதால், அந்த வீட்டு உரிமையாளர் புகார் அளித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர் பிரின்ஸ், நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டது தொடர்பாக பேரவையில் வினா எழுப்பினார்.  அப்போது பேசிய முதலமைச்சர், ‘பேச்சாளர் நெல்லை கண்ணன் பொதுக்கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து பேசியது யாராலும் ஏற்று கொள்ள முடியாது. எந்த கட்சி பிரமுகராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டத்தில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை’ என்று  விளக்கம் அளித்தார்.

Tags : nellai kannan , No motive, nellai kannan ,CM description
× RELATED பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக...