×

அமெரிக்காவில் நீதிபதிகளாக 2 இந்திய பெண்கள் பதவியேற்பு

நியூயார்க்: அமெரிக்காவில் 2 இந்திய வம்சாவளி பெண்கள் நீதிபதிகளாக பதவியேற்றுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக அர்ச்சனா ராவும், சிவில் நீதிமன்ற நீதிபதியாக தீபா அம்பேத்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களாவர். போர்தாம் சட்ட பல்கலை.யில் படித்த, நீதிபதி அர்ச்சனா கடந்தாண்டு ஜனவரி முதல் நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்றத்தின் இடைக்கால நீதிபதியாக பதவி வகித்தார். முன்னதாக, நியூயார்க் மாவட்ட வழக்கறிஞராக 17 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். ரூட்ஜெர் சட்ட கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த நீதிபதி தீபா இடைக்கால குற்றவியல் நீதிபதியாக கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் முதல் பணியாற்றிய நிலையில், தற்போது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் நியூயார்க் நகர கவுன்சிலிலும், பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

Tags : women ,US ,Indian ,judges , America, Justice, 2 Indian Women, sworn in
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...