×

ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் 2வது சுற்றில் வோஸ்னியாக்கி

ஆக்லாந்து: நியூசிலாந்தில் நடைபெறும் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றார். முதல் சுற்றில் உள்ளூர் வீராங்கனை மேரி ஹவ்ரிகனுடன் நேற்று மோதிய வோஸ்னியாக்கி 6-1, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 53 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. செரீனா வில்லியம்சுடன் இணைந்து இரட்டையர் பிரிவு முதல் சுற்றிலும் வோஸ்னியாக்கி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒற்றையர் பிரிவில் செரீனா தனது முதல் சுற்றில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் கேமிலா ஜியார்ஜியை (இத்தாலி) வீழ்த்தினார்.


Tags : round , ASP Classic, Tennis, 2nd, Wozniacki
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து