×

சூரியனைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற கிரகங்கள்!

நாசாவின் கெப்ளர் வான்வெளித் தொலைநோக்கி மூலம் நடைபெற்றுவந்த ஆராய்ச்சிகள் மூலம் சில புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. 2009-ம் ஆண்டில் கெப்ளர் ஆய்வினைத் தொடங்கி பிரபஞ்சத்தில் பூமி மட்டும் தனித்துள்ளதா இல்லை அது போன்ற கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சி தொடங்கப்பட்டது.விஞ்ஞானிகள் இதுவரை 4,034 கிரகங்களைக் கண்டறிந்துள்ளனர். இதில் பூமி போன்றே உருவம் மற்றும் தட்பவெப்பநிலை கொண்ட சுமார் 50 கிரகங்கள் வரை இருப்பதாக தெரிவித்தனர். அதில் 10 கிரகங்கள் பூமியைப் போலவே சூரியனை சுற்றிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகங்களில் பூமியைப் போலவே தட்பவெப்பநிலையும், பூமியின் அளவைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 219 கிரகங்களை உயிரினங்கள் வாழத்தக்க பட்டியலில் நாசா விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர்.பூமியைப் போலத் தட்பவெட்பநிலையும், தண்ணீருக்கான சாத்தியக்கூறுகளும் இந்த கிரகங்களில் உள்ளதாக நாசா தெரிவித்தது. மேலும், மற்ற தொலைநோக்கி மூலம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் நமது சூரியக் குடும்பத்தினையும் கடந்து அமைந்துள்ள விண்மீன் கூட்டங்களில் சுமார் 3,500 கிரகங்கள் பூமியைப் போல இருப்பதற்கு வாய்ப்புள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Tags : planets , Earth-like planets orbiting the sun!
× RELATED மாசி மகத்தையொட்டி பூம்புகார் கடற்கரையில் தீர்த்தவாரி