×

உபி-யில் மனிதர்களை வேட்டையாடிய சிறுத்தைப்புலி சுட்டுக்கொலை...பள்ளி சிறுவனை கடித்து குதறி கொன்றதால் ஆவேசம்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் மனிதர்களை வேட்டையாடி வந்த சிறுத்தை புலியை கிராமமக்கள் சுட்டுக்கொன்று இழுத்து சென்ற காட்சி சமூகவலைத்தலத்தில் பரவிவருகிறது. பிஜினபுரம் மாவட்டம் போக்குர் கிராமத்தில் சிறுத்தை புளியை மக்கள் வேட்டையாடி உள்ளனர். அருகில் உள்ள வனத்தில் இருந்து அவ்வப்போது கிராமத்துக்குள் வந்த சிறுத்தை புலி ஒன்று மக்களை கொன்று வந்துள்ளது.

நேற்று பள்ளி முடிந்து வந்த சிறுவன் மீது பாய்ந்த அந்த சிறுத்தை புலி அந்த சிறுவனை அடித்து கொன்றது. இதனால் கோபமடைந்த கிராமமக்கள் ஆயுதங்களுடன் ஒன்று கூடி சிறுத்தை புலியை தேடினர். அப்போது புதருக்குள் மறைந்து இருந்த சிறுத்தைப் புலியை கிராமமக்கள் சுட்டுக்கொன்றனர்.

இதன் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுத்தைப்புலியை ஊர்வலமாக கிராம மக்கள் இழுத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து சிறுத்தைபுலியின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


Tags : Leopard shooting ,Uppi ,poaching leopard bite kutari school boy , UP-human,leopard , kutari ,school boy, dead,obsession
× RELATED பாடகியுடன் பழகிய பல்லாயிரம் பேர் பீதி: ஆயிரம் பேரை களமிறக்கியது உபி அரசு