×

அதிமுக அரசு மீது விமர்சனத்தை பாதியில் நிறுத்திய சபாநாயகர்..பேச விடாததால் ஆளுநர் உரையை கிழித்த ஜெ. அன்பழகன், பேரவையில் இருந்து 3 நாட்கள் இடைநீக்கம்

சென்னை : சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நகலை கிழித்ததற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் நடப்பு கூட்டத்தொடரின் பேரவையில் இருந்து 3 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அரசின் பல்வேறு செயல்பாடுகளை அன்பழகன் விமர்சித்து பேசினார். அப்போது முதல்வர்களும் அமைச்சர்களும் குறுக்கீட்டு குற்றச் சாட்டுகளை மறுத்து பதில் அளித்தனர். ஒரு கட்டத்தில் அன்பழகன் பேச்சு பாதியிலேயே நிறுத்தாமாறு சபாநாயகர் தனபால் அறிவுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்பழகன், ஆளுநர் உரை நகலை கிழித்து எரிந்தார்.

இதையடுத்து அன்பழகன் பேரவையில் இருந்து 3 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.முன்னதாக ஜே. அன்பழகனை நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை துணை முதல்வர் பன்னீர் செல்வம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அன்பழகன் மீதான நடவடிக்கை 3 நாட்களாக குறைக்கப்பட்டது.

ஜே.அன்பழகன் பேட்டி

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் தன்னை பேச விடாமல் குறுக்கீடு செய்ததாக குற்றம் சாட்டினார். மேலும் பேரவைத் தலைவர் வேண்டுமென்றே தன்னை பேச அனுமதிக்கவில்லை என்றும் தன்னிலை விளக்கம் அளித்தார். மேலும் அவர் பேசியதாவது,தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று கூறினேன். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து பேசினேன். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு அதிமுக அரசு ஆதரவு அளித்தது ஏன். அதிமுக அரசை விமர்சிக்க தன்னை அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

Tags : Speaker ,government ,AIADMK ,council ,Dear Sir ,Sir , Legislature, Governor, Text, J. Prerogative, suspended
× RELATED நீலகிரி அதிமுக வேட்பாளர் சேலத்தில் வாக்களித்தார்