×

ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்: குஜராத்தில் ஏபிவிபி-இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் இடையே கடும் மோதல்

காந்திநகர்: குஜராத்தில் ஏபிவிபி மற்றும்  இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை(ஜேஎன்யு) கழகத்தில் விடுதி கட்டணங்களை உயர்த்தியதோடு, புதிய வரைவு கொள்கைகள் கொண்டு வரப்பட்டது. இதற்கு மாணவர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்து தொடர் போராட்டங்கள் நடந்தன. மேலும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பல்கலைகழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வன்முறை வெடித்தது.  கலந்தாலோசனை கூட்டத்தில் முகமூடி அணிந்து இரும்பு கம்பிகள், ஹாக்கி மட்டைகள், உருட்டுக் கட்டைகளுடன் வந்து கும்பல் ஒன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் குஜராத் தலைநகரான அகமதாபாத்திலே நாட்டின் பல்வேறு பகுதிகளிலே நடந்து வருவதைப்போலவே ஜே என் யூ வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.  அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் ஆதரவு அமைப்பான என்ஏசிஐ சேர்ந்த ஆதரவாளர்கள்  ஏபிவிபி அலுவலகத்திற்கு அருகே சென்று அங்கு போராட்டம் நடத்த முயற்சி செய்தார்கள். அப்போது 2 தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் கடுமையாக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட நிலையிலே மிகவும் இரத்த காயங்கள் ஏற்பட்டது. அப்போது போலீசார் அங்கு வந்து தாக்குதலை தடுத்து வன்முறையை கலைத்தனர். அதற்கு மும்பாகவே இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு எதிரெவரும் பேருந்திலிருந்து இறங்குவோரையும் தாக்கியிருக்கின்றனர். ஏற்கனவே சிஏஏக்கு எதிரான போராட்டமும் வன்முறையில் முடிந்தது. இந்த போராட்டமும் அதேப்போல் வன்முறையில் தொடங்கியிருக்கிறது.


Tags : JNU ,ABVP-Indian National Students Union ,clash ,attack ,Gujarat Protest ,Gujarat , JNU Struggle, Gujarat, ABVP Manual, Conflict
× RELATED உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு