×

தெலங்கானா மாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 3,500 டன் புழுங்கல் அரிசி

ஈரோடு:  தெலங்கான மாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு பொது விநியோக திட்டத்தில் விநியோகிப்பதற்காக 3,500 டன் புழுங்கல் அரிசி நேற்று ரயிலில் வந்தது.  தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி  விநியோகிக்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக தெலங்கானா மாநிலம் ஜன்கோன் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 3,500 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த அரிசி, 50 கிலோ மூட்டைகளாக தனி சரக்கு ரயிலில் 58 பெட்டிகளில் ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு நேற்று வந்தடைந்தது.  இந்த அரிசி மூட்டைகளை நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மத்திய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Tags : state ,Telangana ,Telangana State , From Telangana ,Erode ,3,500 tonnes ,wormwood, train
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...